| அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு 2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம் நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார். அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார். நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..' 'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?' என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை என் நாய் கடித்து விட்டது. உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார். வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர். அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார். | ||||
| நல்லா மூச்சு முட்ட குடிச்சதால ஹேங் அவுட் ஆன புருஷன் லேட்டா எழுந்து ரூம விட்டு வெளிய வந்து பாத்தான்.டைனிங் டேபிள்ல லெட்டர்,”அன்பே ஹாட் பேக்கில் சப்பாத்தி இருக்கிறது நீங்கள் களைப்பாக இருப்பீர்கள் என்று உங்கள் பாஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லிவிட்டேன் மாலை சந்திப்போம்”.அவனுக்கு ஒண்ணும் புரியல , குழந்தைங்க கிட்ட,”என்னடா நடந்தது நைட்”னான். அது,” நீங்க ரொம்ப குடிச்சிட்டு க்லாஸ் எல்லாம் உடைச்சிட்டு வாந்தி எடுத்தீங்க” “ஆனா எல்லாம் நீட்டா இருக்கு சரி மேல சொல்லு” “அப்புறம் அம்மா உங்கள படுக்க வைக்க ஷர்ட்,பேன்ட்லாம் கழட்டுனாங்க, நீங்க ‘கையை எடு கேடு கெட்டவளே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி’ன்னீங்க” | ||||
| ஒரு வெள்ளிக்கிழமை, இளைஞன் நகைக்கடைக்குள்ள ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தான்.அங்கிருந்த ஆளை கூப்பிட்டு "என் காதலிக்கு ஒரு வைர நகை எடுக்கணும்" அப்டின்னான், அந்தப் பொண்ணை பார்த்துக்கிட்டே. கடைக்காரரும் ஒரு நகையை காட்டி 50000 ரூபா ஆகும்னாரு.அவன் சலிச்சுக்கிட்டே,"இல்ல பாஸ் என் காதலிக்கு தர்ற நகை...யுனிக்...அப்டியே அவ்ளோ அழகா இருக்கணும்" கடைக்காரர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு லட்ச ரூபா நகை ஒண்ணு காமிச்சார், அந்தப்பொண்ணுக்கு கண் கொள்ளல, அவன் "ஓகே ஓகே இதை பேக் பண்ணுங்க நான் செக் தர்றேன்" அப்டின்னான். "ஸாரி சார் செக் ஏத்துக்கறதில்ல" "ஓகே இப்ப செக் வாங்கிக்கங்க திங்கக்கிழம பேங்க்ல பணம் இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள். திங்கட்கிழமை கடைக்காரர் கோபமாக போனில் பேசினார்,"யேய் பேங்க்ல உன் அக்கவுண்ட்ல ஒரு பைசா இல்ல எதுக்குடா வந்து ஆர்டர் பண்ணின?" "மன்னிச்சுக்கங்க சார் ஆனா இந்த வீக் எண்ட் எப்டி போச்சு தெரியுமா?" | ||||
| புதிதாக திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில் வரவில்லை. வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து பதிலில்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும் பதிலில்லை. அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள். | ||||
| ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்களாம் நேத்து எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை நான் பீச் போலாம்கறேன் அவ சினிமா போலாம்னா சரி கடைசில என்ன படத்துக்கு போனீங்க? | ||||
| ஒரு புருஷன் பொண்டாட்டி பட்ஜெட் போட்டாங்களாம் அதுபடி சிக்கனமா இருக்கணும்னு முடிவு எடுத்து புருஷன் இனி பீர் குடிக்கக் கூடாதுன்னுட்டாளாம்.சரின்னு அவனும் நிறுத்த நிறைய பணம் மிச்சமாகி இருக்கு.அப்ப தான் நோட் பண்ணிருக்கான்,பொண்டாட்டி மேக் அப்புக்காக ரொம்ப செலவு பண்ணிருக்கா அப்டின்னு. நேரா போய் அவ கிட்ட “இனி நீ மேக் அப்புக்கு இவ்ளோ செலவு பண்ணக்கூடாது என்ன மட்டும் பீர் அடிக்கக்கூடாதுன்னல்ல” அப்டின்னான், அவ”உங்க கண்ணுக்கு அழகா தெரியணும்னு தானேங்க மேக் அப் பண்றேன்”ன்னா அவன் உடனே சொன்னான்,” நான் பீர் குடிக்கறதும் அதுக்கு தானே” நாளைக்கு அவனுக்கு பாலூத்தறாங்க எல்லாரும் வந்துடுங்க | ||||
| ஒரு நாள் பேரழிவுல உலகம் அழிஞ்சிடிச்சி கடவுள் வந்து மனைவிகளை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு பக்கமும், தான் அதிகாரம் பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.பாத்தா ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.அவருக்கு கடுப்பாய்டிச்சி, “என்னப்பா இது என்னோட சாயல்ல உருவாக்கினா இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன் தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மகனே”ன்னாரு.அவன் உடனே சொன்னானாம்,”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”. | ||||
| ஒரு பெண் இறந்து சொர்க்கம் போனாள்,வாசலில் நின்றிருந்த போது அங்கே கடவுள் வந்தார், அவள் அவசரமாக "எப்படி உள்ளே வருவது?" என்றாள். "நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாளர் அங்கே எழுதியிருந்தது "love" அவள் சொன்னதும் வழி விடப்பட்டது.சொர்க்கத்தில் ஒரு வருடம் கழிந்தது.ஒரு நாள் கடவுள் அவளிடம் வந்து இன்றொரு நாள் வருபவர்களை கவனித்துக் கொள் எனக்கு வேலை இருக்கிறது" என்றார். அவள் கேட்டில் நின்ற போது அவள் கணவன் வந்தான்,"ஹேய் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை" "சரி பூமியில் எப்படி வாழ்ந்தாய்?" "நீ காய்ச்சலாக கிடந்த போது பார்த்துக்கொண்டாளே ஒரு அழகான நர்ஸ் அவளை கல்யாணம் செய்து கொண்டேன் லாட்டரியில் பரிசு கிடைத்தது நாம் இருந்த சின்ன வீட்டை விற்று பெரிய அப்பார்ட்மெண்ட் போனோம் அப்புறம் டூர் போனபோது ஆக்சிடெண்ட் ஆகி இறந்து இங்கே வந்தேன் சரி எப்படி உள்ளே வருவது?" "நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாள் அங்கே எழுதியிருந்தது, "Czechoslovakia." | ||||
| கணவன் மனைவி சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கணவன் மனைவிடம் பேசமுடியாததால், அதிகாலை 5 மணிக்கு எழுப்பு என்றெழுதிய தாளை கொண்டு போய் மனைவியின் தலையனைக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விட்டான். மறுநாள் எழுந்தேபாது 7 மணி ஆகியிருந்தது. கோபத்துடன் மனைவியை பார்த்தான். மனைவி அவன் தலையனையை சுட்டி காட்டினாள். அதன் அடியில் ஒரு தளில் மனைவி எழுதியிருந்தாள். தயவு செய்து எழுந்திருங்கள் மணி 5. | ||||
| பெண்கள் 35க்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது நீங்கள் இதை ஒப்புக்கொள்ளாமல் போகலாம் ஆனால் நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது பற்றி பேசுபவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. என் நண்பர்கள் , மருத்துவர்கள் , ஏன் நீங்கள் கூட எதிர்க்கலாம் ஆனால் நான் என் வாதத்தை கை விட மாட்டேன் சத்தியமாக நான் அறிவுரை சொல்லவில்லை பரிந்துரைக்கிறேன் நீங்கள் என்னை எதிர்க்கலாம், ஆனால் யார் கேட்டாலும் என் பெயரை சொல்லுங்கள் அது மட்டுமல்ல இது வரை அப்படி பெற்றுக்கொண்ட யாரையும் நான் பார்த்தில்லை ஒருவேளை பார்த்தால் நம்புவேன் அதுவரை ஒப்புக்கொள்ளமாட்டேன் கண்டிப்பாக பெண்கள் 35 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது | ||||